இலங்கை போக்குவரத்து சபையின் முதூர் சாலையினால் சம்பூரில் இருந்து கொழும்பு, பஸ் சேவை நேற்று இரவு 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது
கட்டைபறிச்சான் கற்பக விநாயகர் ஆலய முன்றலில் வைத்து இச்சேவை கட்டைபறிச்சான நலன்விரும்பி கோ.இரட்ணசிங்கம் அவர்களினாலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனினாலும் இணைந்து ஆரம்பித்து வைக்க்பட்டது.
சாலை அத்தியட்சர் எ.எல்.நௌபீரினால் இச் சேவை முன்னெடுக்கப்பட்டது.
தினமும் சம்பூரில் இருந்து இரவு 10.30 க்கும் கொழும்பில் இருந்து காலை 7.00 மணிக்கும் இச்சேவை நடத்தப்பட உள்ளது.
இதுவரை காலமும் மூதூர் கிழக்கு பிரதேச மக்கள் கொழும்பு செல்வதானால் மூதூர் புளியடிச் சந்திக்கு 150 ரூபாய்கள் செலுத்தி சென்று அங்கிருந்து கொழும்பு வண்டியை பிடிக்க வேண்டி உள்ளது. இனி வரும் நாட்களில் இச்சிரமம் இப்பகுதி மக்களுக்கு குறைக்கப்பட உள்ளது.
348.00 பணச் செலவில் கொழும்பு வெள்ளவத்தையை அடைய முடியும்.
0 Comments:
Post a Comment