மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை (30) 1.30 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒருவரை தாக்கியுள்ளதுடன், அவரது வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இக்காட்டு யானையின் தாக்குதலில், தாந்தாமலைக் கிராமத்தைச் சேர்ந்த, 65 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான முத்தையா பிள்ளையார்போடி என்பவரைத் தாக்கியுள்ளதுடன், அவரது வீட்டையும், தாக்கியுடைத்துள்ளது.
இதில் படுகாயமடைந்த நபர், மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பட்டிப்பளைப் பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment