28 Sept 2015

நிந்தவூர் சுகாதார அதிகாரி காரியாலையத்தில் தாய் ஒருவருக்கு நடந்த சம்பவம்

SHARE
26-09-2015 அன்று தாய் ஒருவர் தனது ஒன்ரை மாத குழந்தையை நிந்தவூர்-16ம், பிரிவு நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்திருக்கும் சுகாதார அதிகாரி காரியாலையம் (M.O.H.Offfice)க்கு தனது குழந்தையை போசாக்கு பரிசோதனைக்காக நிறுத்து இடை பார்ப்பதற்கு எடுத்துச் சென்றபோது அங்குள்ள தாதி ஒருவர் குழந்தையை நிறுத்து இடை பார்த்துவிட்டு குழந்தையின் தாயிடம் குழந்தைக்குரிய “த்றிபோசா மாவினை பெற்றுச் செல்லுமாறு கூறியிருக்கின்றார்.

தாயிம் அங்கு பல நேரமாக காத்திருந்து சற்று நேரம் கழித்துவிட்டு அங்குள்ள தாதி ஒருவரிடம் கேட்டிருக்கின்றார் தான் பல நேரமாக எனது ஒன்னரை மாத குழந்தையை வைத்துக்கொண்டு காத்துதிருக்கின்றேன் இன்னும் நீங்கள் “த்றிபோசா தரவில்லையே என்ன காரணமென்று கேட்டிருக்கின்றார் அதற்கு அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாதி ஒருவர் கூறியிருக்கின்றார் த்றிபோசா களஞ்சிய அறையின் திறப்பு (சாவி) வேறொரு தாதியிடம் உள்ளது அவர் வரும் வரைக்கும் காத்திருக்கும்படி ன்ரை  மாத குழந்தையின் தாயிடம் தாதி கூறியுள்ளார்.



மேலும் அந்த ன்ரை  மாத குழந்தையின் தாய் தனது குழந்தையை கையில் ஏந்தியவாறு சுமார் இரண்டரை மணித்தியாலம் காத்திருந்த பிற்பாடு திரும்பவும் அங்குள்ள தாதி ஒருவரிடம் கேட்டுள்ளார் இன்னும் த்றிபோசா தரவில்லையே களஞ்சிய அறையின் திறப்பை வைத்திருக்கும் தாதி இன்னும் வரவில்லையா என்று கேட்டதன் பிற்பாடு அங்குள்ள தாதி கூறியுள்ளார் அந்த களஞ்சிய அறையின் திறப்பை வைத்திருக்கும் தாதி விடுமுறையில் இருக்கின்றார் அவர் இன்றைக்கு வரமாட்டார் வேறு ஒரு நாளில் வந்து த்றிபோசாவை பெற்றுகொள்ளுமாறு தாதி கூறியிருக்கின்றார்.


பின்னர் அந்தத் தாய் தனக்கு ஏற்பட்ட நிலமையை கணவரான ஷாபி அவர்களிடம் கூறியதும் அவர் உடனே (M.O.H.Offficeக்கு வந்து தனது மனைவிக்கு ஏற்பட்ட அவதூறை பற்றி நியாயம் கேட்டது அங்குள்ள தாதியர்கள் பல கோணங்களில் பதில் கூறியதாக ஷாபி அவர்கள் தெரிவித்ததோடு இதுவொரு அநியாயமான செயற்பாடு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான காலநேர அட்டவணை குறிப்பிடப்பட்டு பணிபுரிவதாக தெரியவில்லை அப்படி முறையாக குறிபிட்ட அட்டவணைப்படி பணிபுரிந்திருந்தால் எனது மனைவியை அவ்வளவு நேரம் காத்திருக்க வைத்து கலைவாரி விட்டிருக்கமாட்டார்கள் என கூறியதோடு இதற்குரிய சட்ட நடவடிக்கையை கணவரான ஷாபி அவர்கள் உடனே மேற்கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

தகவல்:தாயின் கணவர் எஸ்.எ.எம்.ஷாபி

96,புகாரி வீதி நிந்தவூர்-16.

நன்றி வன்னி நியூஸ்


SHARE

Author: verified_user

0 Comments: