5 Sept 2015

நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு வவுணதீவு பிரதேச சபையில்

SHARE
இலங்கையின் அரசியல் வரலாறு இதுவரை இருந்த அரசியல் வரலாறுகளிலிருந்து புதிய பக்கங்களை தருகின்ற அரசியல் வரலாறு என்பதனை நாம் மனதில் பதித்து வைத்திருக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மண்முனை மேற்கு கிளையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வும் வவுணதீவு பிரதேச சபையின் சந்தைக் கட்டத் தொகுதியில் நடைபெற்றது,
இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய அத்தியாயம் ஒன்றை நாம் ஆரம்பிக்கவுள்ளோம், அதற்கு தமிழ் மக்கள் பலத்தை வழங்க வேண்டும். இரண்டு தேசியப்பட்டியலும், 18 உறுப்பினர்களையும் தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு எமது இலக்கு 18 உறுப்பினர்களாக இருந்தபோதும் 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்தோம் எனவும், அடுத்த இலக்கினை அடைந்திருக்கிறோம், அதுதான் இரண்டு தேசியப்பட்டியல் என்றும் தெரிவித்தார்.

அந்த வலுவுடன் தான் எமது தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்துள்ளார் எனத் தெரிவித்த அவர்,

கடந்த ஜனவரியில் தாம் எதிர்க்கட்சியாக வந்திருக்கவேண்டும் எனவும், ஆனால் அப்போதிருந்த குழப்பம் காரணமாக அது கைகூடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் கூடுகின்றபோதும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தமக்கு எதிர்க்கட்சி வேண்டும் என்று வியூகங்களை அமைத்துக் கொண்டிருந்ததாக கூறிய இவர்,

சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவராக எமது தலைவராக நியமித்ததற்கும், ஜனாதிபதியின் முடிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
SHARE

Author: verified_user

0 Comments: