12 Sept 2015

கழிவுகளை அகற்றும் பணி

SHARE
அம்பாறை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக் கழிவுகளை அகற்றும் பணிகள், இன்று (12) தொடக்கம் வழமை நிலைக்குத் திரும்புமென கல்முனை மாநாகர முதல்வர் சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். சேகரிக்கப்படும் குப்பை, கூளங்களை கொட்டுவதில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அகற்றப்பட்டு வந்தன. இதனால், சில பகுதிகளில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதாக பொது மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இவ்விடயம் மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக குப்பை கொட்டும் இடமொன்றில் ஏற்பட்ட தடங்கல் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அடுத்த ஒரு வார காலத்தினுள் முற்றாக அகற்ற முடியும் என குறிப்பிட்ட முதல்வர் நிஸாம் காரியப்பர், கடந்த இரு வாரங்களாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் 
SHARE

Author: verified_user

0 Comments: