4 Sept 2015

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற ஆசிரியர் கைது

SHARE
திருகோணமலை, சூரியபுர பகுதியில் எட்டு வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரொருவரை, நேற்று வியாழக்கிழமை (03) இரவு 8.00 மணியளவில் கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.  
    கைது செய்யப்பட்டவர், சூரியபுர பிரதேசத்திலுள்ள சிறுமிகளுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர் எனவும் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றதாக சிறுமி தாயிடம் கூறியதையடுத்து, தாய் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்ததாகவும் சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.  சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சூரியபுர பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: