1 Sept 2015

சம்பூருக்கு அமெரிக்க அதிகாரிகள் விஜயம்

SHARE
அமெரிக்க ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும்; தொழில் பணியக அதிகாரிகளின் பிரதானி ரோஸ் ஜக்சன் மற்றும் அதன் உதவிச் செயலாளர் டொம் மலினோஸ்கி உள்ளிட்டோர் திருகோணமலை, சம்பூர் பிரதேசத்துக்கு சனிக்கிழமை (29) விஜயம் செய்தனர். இவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
சம்பூர் பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள மக்களை சந்தித்து இவர்கள் கலந்துரையாடினர். இதன்போது, அம்மக்களின் நிலைமை தொடர்பிலும் இவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.  
SHARE

Author: verified_user

0 Comments: