23 Sept 2015

கல்முனை தமிழ்ப்பிரிவில் கடற்கரை பிரதேசங்களை சுத்தப்படுத்தும் நிகழ்வு

SHARE

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘கடற்கரை பிரதேசங்களை சுத்தப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்  கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை கிராமங்களின் கடற்கரை பகுதிகள் நேற்று(22) பிரதேச செயலாளர் எஸ்.கே.லவநாதன் தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பி வணிகசிங்க நேரடியாக வருகைதந்து நிகழ்வினை பார்வையிட்டார். உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன், அபிவிருத்தி உதவியாளர் எம்.ஏ.நபீல் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  

இதேவேளை மாவட்ட அரசாங்க அதிபருக்கான கௌரவிப்பு நிகழ்வொன்று அக்கரைப்பற்று ‘ஏசியன் செப்’ ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பி வணிகசிங்க,
இன்று காலை கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினால் நடைபெற்ற ‘கடற்கரை பிரதேசங்களை சுத்தப்படுத்தும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அங்கு பெண்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 400 க்கும் அதிகமான பெண்கள் பங்குபற்றியிருந்தனர். பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு எனக்கு மகிழ்சியை தருகிறது. என வாழ்த்தி பேசினார். 









SHARE

Author: verified_user

0 Comments: