16 Sept 2015

கி.மா. முதலமைச்சர் - ஆஸி. குழுவினர் சந்திப்பு

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கும்  அவுஸ்திரேலிய அபிவிருத்தித் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் தலைமையிலான குழுவினருக்கும் இடை;யிலான சந்திப்பு, நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் தெரிவித்த முதலமைச்சர், 'கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் இதன் மூலமாக இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், குறைந்த சம்பளத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாளர்களாக தொழில் புரியும் இலங்கை இளைஞர், யுவதிகள் சிரமப்படுவது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.  சுற்றுலாத்துறை பயிற்சிகள் மூலம் இளைஞர், யுவதிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான வேலைவாய்ப்பு பெறுவதற்காக அவுஸ்திரேலியா 15 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை ஒதுக்கியுள்ளதாக குழுவினர் தெரிவித்தனர். 

இந்நிதி மூலம் 04 வருட செயற்றிட்டமாக சுற்றுலா அபிவிருத்திகள் இடம்பெறவிருப்பதாக அவுஸ்திரேலிய அபிவிருத்திக் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் தெரிவித்தார்' எனக் கூறினார். 

இக்கலந்துரையாடலின்போது முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சமந்த அபேவிக்கிரம, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் டாக்டர் ஆர்.ஞானசேகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.  




SHARE

Author: verified_user

0 Comments: