28 Sept 2015

தமிழர்களிடத்திலிருந்துதான் முஸ்லிம்கள் அரசியலைப் படித்தார்கள் - அமீரலி

SHARE
தமிழர்களிடத்திலிருந்துதான் முஸ்லிம்கள் அரசியலைப்படித்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியில் குறைவாகவுள்ளன.  ஆட்சியில் எந்த அரசு வருகின்றதோ அவர்களோடு சேர்ந்து நின்று முஸ்லிம் சமூகத்தினர் அவர்களை அபிவிருத்தி செய்து கொள்கின்றார்கள். ஆனால் தமிழ் சமூகத்திடம் அது குறைவாகவுள்ளது.
என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீரலி தெரிவித்தார்.  மேற்படி பிரதியமைச்சரை வரவேற்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் ஞாயிற்றுக் கிழமை (27) நடைபெற்றது. களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலனசபைத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் சி.மு.இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர்மேலும் குறிப்பிடுகையில்….

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதி மக்களில் பலர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை என ஒரு பலமான குற்றச்சாட்டைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

ஆட்சியையும், அதிகாரத்தையும் தருவது கடவுள் நம்பிக்கையாகும். என்னைப்போலவே பிறரும்  இருக்க வேண்டும் என நினைக்கும் ஒரு ஆத்மாத்தமான அரசியல்வாதி நான். 

நான் ஒரு இஸ்லாமியன் என்ற காரணத்தினால் பள்ளிவாசலில் ஒரு விடையத்தையும். இந்துக்கோவிலில் அல்லது வேறு விடையத்தையும், தேவாலயத்தல் மற்றுமொரு விடையத்தையும் தெரிவிப்பவனனல்ல. நான் சிறுவயதிலிருந்து மனித நேயத்தைக் கற்று வந்துள்ளேன். இவ்வாறான சூழலில் எமது வேட்பாளர் கணேசமூர்த்தியை இம்முறை பட்டிருப்புத் தொகுதி மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். இந்த வித்தில் பாரிய தவறை பட்டிருப்பு தாகுதிவாழ் மக்கள் விட்டிருக்கின்றார்கள். 

இருந்த போதிலும், பட்டிருப்பு தொகுதியில் எந்தவித நாடாளுமன்ற உறுப்பினர்களும், இம்முறை தொரிவு செய்யப்படா விட்டாலும், இப்பகுதி மக்கள் மத்தியில் நான் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளேன்.

அந்த வகையில் களுவாஞ்சிகுடியில் அமைக்கப் படவிருக்கின்ற பேரூந்து தரிப்பிடத்திற்கு 90 லெட்சம்ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளேன். இதுபோன்று இப்பகுதி புத்திஜீவிகளுடன் இணைந்து மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்நெடுக்கவுள்ளேன். 

மட்டக்களப்பு மாவட்டம் மதுபோதையில் முதலாவதாக பெயர்போன மாவட்டமாகவுள்ளது. மட்டக்களப்பில் வறுமை அதிகரித்துச் செல்வதற்கு இந்த மதுபோதைதான் காரணம் என என்னுடைய ஆய்வின் மூலம் தெரிவிக்கின்றேன். 

தமிழ் சமூகத்திடமிருக்கின்ற போதைப் பழக்கங்கள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். நாளான்றுக்கு 1000 ரூபாய் உழகை;கின்றார்கள் 800 ரூபாவுக்கு குடிக்கின்றார்கள். ஆனால் இவ்வாறான நிலமை முஸ்லிம் மக்களிடத்தில் இல்லை.  எனவே தமிழ் சமூகத்தின் மத்தியில் மனநிலை மாற்றம் அவசரமாகப் கொண்டுவர வேண்டிய நிலை காணப்படுகின்றது. இவற்றுக்காக இப்பிரதேச பிரமுகர்கள் ஒன்றிணைந்து இப்பிரதேசத்தில் மதுவை ஒழித்து மக்களை முன்நேற்றுவதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழர்களிடத்திலிருந்துதான் முஸ்லிம்கள் அரசியலைப்படித்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியில் குறைவாகவுள்ளன.  ஆட்சியில் எந்த அரசு வருகின்றதோ அவர்களோடு சேர்ந்து நின்று முஸ்லிம் சமூகத்தினர் அவர்களை அபிவிருத்தி செய்து கொள்கின்றார்கள். ஆனால் தமிழ் சமூகத்திடம் அது குறைவாகவுள்ளது.

முஸ்லிம் சமூகத்திலுள்ள அனைத்து பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களை ஆதரித்து அவர்களுக்குத் தேவையனைவற்றைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் தமிழர்களிடத்தில் இவ்வாறான விடையத்தை தமிழ் சமூகம் தவறவிட்டிருக்கின்றது. 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை நகரசபையாக மாற்றுவதற்குரிய என்னாலான சகல ஒத்துழைப்புக்களையும், வழங்குவேன். என்பதோடு, இப்பிரதேச அபிவிருத்திக்கும் என்னாலான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவேன் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: