ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணையானது சர்வதேச பொறிமுறையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்துக்கள் சேகரிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகில் இடம்பெற்றது.
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா, சிவில் சமூகத்தவர்கள், வரியிறுப்பாளர் சங்கத்தினர், கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் உட்பட பலர் கையெழுத்திட்டனர்.
0 Comments:
Post a Comment