திருகோணமலை, வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூமரத்தடிச்சேனைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பொலிஸார் உட்பட எட்டுப் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையிலும் பெண்ணொருவரும் அந்தப் பெண்ணின் சகோதரனும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதன் பின்னர், சேருநுவர பொலிஸ் நிலையத்திலிருந்து உதவிக்கு வரவழைக்கப்பட்ட பொலிஸார் மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வோரும் உறவினர்களும் தாக்குதல் மேற்கொண்டனர் இந்த நிலையில், குழப்பத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டினுள்; கொண்டுவரப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின்போது பொலிஸ் வாகனத்துக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நான்கு பொலிஸார் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, பெண்கள் மூவரும் ஆண் ஒருவரும் வெருகல் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் -
0 Comments:
Post a Comment