மண்முனை தென்மேற்கு கோட்டப் பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணக் கண்காட்சி
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு கோட்டப் பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களது கற்றல் உபகரணக் கண்காட்சி இன்று புதன் கிழமை (30) மட்.அரசடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இக்கண்காட்சியை வைபவரீதியாக மட்டக்களப்பு மேற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரநுதன், மண்முனை தென்மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், உதவிக் கல்விப் பணிப்பாளர் குணசேகரம், வலய ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திறந்துவைத்து கண்காட்சியை பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியில் மாணவர்களது ஆக்கங்கள், அறிவுப் பொருட்கள், கைப்பணிப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
0 Comments:
Post a Comment