ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்கள் மீது கரிசணையுள்ளவரென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
சிகரம் ஜும்ஆப்பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிவைத்த வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்று மாலை 6 மணிக்கு பள்ளிவாயல் தலைவர் எம். தாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்கள் மீது கரிசணையுள்ளவராக காணப்படுகின்றார்.
இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களையும் நேசிக்கின்ற ஒருவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார்.
நான் இந்த சிகரம் கிராமத்திற்கு பல அபிவிருத்திப் பணிகளை செய்து வருகின்றேன்.
யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட இந்த சிகரம் கிராம மக்கள் வீட்டு வசதியின்றி தற்காலிக கொட்டில்களில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களுக்கு நாங்கள் ஒவ்வொருவருக்கும் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை அமைத்துக் கொடுத்து மிகப்பெரிய உதவியினை செய்தோம்.
இன்று அவர்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். அவ்வாறு நான் உதவி செய்தவர்களில் சிலர் எனக்கு வாக்களிக்கவில்லை.
நாங்கள் இவற்றையெல்லாம் செய்வது வாக்குகளை எதிர்ப்பார்த்து அரசியலுக்காக செய்யவில்லை. இறைவன் தந்துள்ள இந்த சந்தாப்பத்தினை பயன் படுத்தி மக்களுக்கு ஏறதாவது செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் சஊதி அரேபியாவில் பலரையும் சந்தித்து உதவியைக் கேட்டு அந்த உதவியை இந்த மக்களுக்காக கொண்டு வந்து கொடுக்கின்றோம் என்றார்.
இதன்போது ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எல்.மும்தாஸ் மதனீ காத்தான்குடி காழி நீதிபதி மௌலவி எஸ்.எம். அலியார் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment