30 Sept 2015

களுவாஞ்சிகுடியில் பிள்ளைகளை உயிர் போல் காப்போம்,எனும் தொணிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி

SHARE
சர்வதேச சிறுவர் தினைத்தை முன்னிட்டு இன்று புதன் கிழமை (30) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் “பிள்ளைகளை உயிர் போல்” காப்போம், எனும் தொணிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணியொன்று நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று இளைஞர் சம்மேளன தலைவர் இ.வேணுராஜ், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தர் ஜே.கலாராணி, மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள், களுவாஞ்சிகுடி, தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள், என பலரும் காலந்து கொண்டிருந்தனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழிப்புணர்வுப் பேரணி களுவாஞ்சிகுடி அற்புதப்பிள்ளையாரடி வரைக்கும் சென்று மீண்டும், பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தது.

இதன்போது  நாங்கள், பச்சிளம் பாலகர்கள், எங்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தாதீர்கள், ஐயோ எனக்கு அடிக்காதீர்கள், தாய்மார்களே எங்களைவிட்டு வெளிநாடு செல்லாதீர்கள், அம்மா, அப்பா எங்களோடு இருங்கள், போன்ற வாசகங்கள் பொறிக்கபட்ட பதாகைகளை மாணவர்கள், ஏந்திவாறு இப்பேரணியில், ஈடுபட்டனர்.















SHARE

Author: verified_user

0 Comments: