23 Sept 2015

வெளிநாட்டு விசாரணைகள் முன்நெடுக்கப் படுகின்றபோதுதான் காணாமல் போனவர்களின் உறவுக்கும் நியானமான தீர்வு கிடைக்கும்- அமலநாயகி

SHARE
இலங்கையில் நடைபெற்று முடிந்தயுத்தம் தொடர்பில் தற்போதுபேசப்பட்டு வருகின்ற வெளிநாட்டு விசாணையா? அல்லது உள்நாட்டுப் பெறிமுறையா? என பலரலும் பேசப்பட்டு வருகின்ற இந்நிலையில் உண்மையிலேயே வெளிநாட்டுப் பொறிமுறையையே! நாமும் வேண்டி நிற்கின்றோம்!
ஏனெனில் இதுவரையில் காணாமல் போனவர்களைக் கண்டிறிவதற்கு எமக்கு உள்நாட்டில் இடம்பெற்று வந்த விசாரணைகளின் மூலம், திருப்தியளிக்கவில்லை அதில் எதுவித பலனும் இல்லை யுத்தக் குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் முன்நெடுக்கப் படுகின்றபோதுதான் காணாமல் போனவர்களின் உறவுக்கும் நியானமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். என காணாமல் போனவர்கள் சார்பான உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பின் தலைவி திருமதி.அமல்ராஜ்-அமலநாயகி தெரிவித்துள்ளார்.

காமாணல் போன உறவுகளைத் தேடிக் கண்டறிவது தொடர்பிலும், தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நடைபெற்று முடிந்த யுத்த செயற்பாடுகளுக்கான விசாரணைகள் தொடர்பிலும், இன்று புதன்கிழமை (23) அவர் வெளியீட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது….

காணாமல் போனவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் நாம் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்,   
கடந்த 85 ஆம் அண்டிலிருந்து காணாமல் போனவர்களைக் கண்டறிந்து தருகின்றோம், என கடந்த காலங்களிலிருந்த இலங்கை அரசுவு வெறுமனே காலங்களைக் கடத்தியும், இதுவரையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் எதவித பதிலையும் இலங்கை அரசு எமக்குத் தரவில்லை. இனிமேலும் இலங்கை அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான பதிலைத் தரும் என நாம் நினைக்கவில்லை.

இந்த விடையங்கள் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும், வெளி நாட்டு பிரமுகர்களிடமும் நாம் இவ்வியைடம் தொடர்பில் மிகவும் தெழிவாக எடுத்துரைத்துள்ளோம்.

ஆனால் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் உள்ளாட்டுக்குள்ளேயே விசாரணைகள் முன்நெடுத்தால் நன்று புதிய அரசாங்கதிற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி பாலக்கலாமே! என எம்மிடம் அந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் கடந்த 2015.08.27 ஆம் திகதி திருகோணமலையில் வைத்து தெரிவித்தனர்.

புதிய ஜனாதிபதி பெறுப்பேற்று 8 மாதங்கள் கடந்த நிலையிலும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன , காணாமல் போனவர்களைப் பற்றியோ, அல்லது அவர்களின் உறவுகைளப்பறியோ இதுவரையில் எந்த விதமான கருததுக்களையும் அவரின் வாய்திறந்து வெளியிடவில்லை, காணாமல் போனவர்களில் ஒருவரைக்கூட இதுவரையில் விடுதலை செய்ய வில்லை,   இனிமேலும் இவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் எமக்கு கிடைக்கும் என நாம் எதிர் பார்க்கவில்லை. 

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என பதில் தருவார் என்ற முதற் காரணத்திற்காகத்தான் நாங்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம், ஆனால் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவாக மாற்றப்பட்டிருக்கின்றரே தவிர ( ஆள்த்தான் மாற்றப் பட்டிரு;ககின்றரே தவிர ஆட்சி மாறவில்லை) எந்த வித மாற்றமும் இல்லை. 


தற்போது வரைக்கும் முன்னைய அரசாங்க கட்டமைப்பிலிருந்து இராணுவ கட்டமைப்புத்தான் உள்ளது, மஹிந்த ராஜபக்ச நிறுவிய காணாமல் போனவர்களைக் கண்டறியும், ஆணைக்குழுதான் தற்போதும் விசாரணைகளை முன்நெடுத்து வருகின்றது. இந்த ஆணைக்குழுவின் முன் நாம் சென்று சாட்சியமளிக்கும்போது அவர்களிடம் நாம் கேட்பது எங்களது வாழ்க்கையைத்தான்,  ஆனால் அவர்கள் எங்களிடம், சமூர்தி முத்திரை இருக்குதா, என்ன உதவி தேவை, என கேட்கின்றார்கள். 

இதுவரைக்கும் நாம் எமது உறவுகளைத் தொலைத்துவிட்டு மிகவும் கஷ்ற்றப்பட்டு, பிச்சை எடுத்து, பிள்ளைகளைப் பார்ததுக் கொண்டு உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றோம் என அந்த அதிகாரிகளிடம் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளோம்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக இவ்வாறாக மேற்கொள்ளும், இலங்கை அரசின் செயற்பாடுகள் மீது நாட் நம்பிக்கை இழந்து கொணப்படுகின்றொம். 

காணாமல்போனவர்கள் தொடர்பில் சரியான விபரங்கள், யார் பித்துக் கொண்டு போனார்கள்,  போன்ற சரியான தகவங்கள்யும், இலங்கை அரசுக்கு வழங்கியும், எதுவித பதிலும் கிடைக்க வில்லை. இருந்த போதிலும் தற்போது முன்நெடுக்கப் படுகின்ற சர’வதேச தலையீடு காரணமாக சர்வதேசம் என்ன பதிலைத் தரப்போகின்றது. என எமக்குத் தெரியாது. ஆனால் சர்வதேசம் எமக்குத் ஆக்கபூர்வமான பதிலைத் தரும் என எதிர்பார்திருக்கின்றோம். 

மட்டக்களப்பு மாட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் 600 பேரின் தரவுகள் எம்மிடம் உள்ளன ஆனால் இதனை விட மேலும் பலர் உள்ளனர் இன்னும் எம்மிடம் சரியான தகவல்கள் கிடைக்கல்லை,  இருந்தலும் 600 இற்கு மேற்பட்டவர்கள் இந்த மாவட்டத்திலிருந்து காணாமல போயுள்ளார்கள். 

எமக்காக குரல் கொடுப்பதற்கு மட்டக்களப்பு மாட்டத்தில் பலர் இருந்தாலும் எம்முடன் இணைந்து செயற்படுவதற் எமக்கு வெளியாட்களின் பலம் போதாமலுள்ளது. எமது வேதனையினை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சம்மந்தப்பட்டவர்களுக்கு இல்லாமலுள்ளது. 

மொழிப்பிரச்சனை காரணமாகவும் மிகவும் நாம் பாதிக்கப் பட்டுள்ளோம் எமது உறவுகள் காணாமல் போயுள்மை தொடர்பில் நாம் வழங்கும் தகவல்களை அப்படியே மொழிபெயர்து உரிய அதிகரியிடம் மொழிபெயர்ப்பாளர் சொல்கின்றாரா என்பதிலும் எமக்கு நம்பிக்கையில்லை.;.

அண்மையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதல் வழங்குவதற்கு, உரிய விண்ணப்பங்கள், அரச உத்தியோகஸ்தர்ககளால் வழங்கப்பட்டுள்ன. இவ்விண்ணப்பத்தை சிலர் ஏற்றுக்கொண்டுள்ளனர் பலர் ஏற்கவில்லை, எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாமல், நாம் மரண சான்றிதழ் பெறப்போவதில்லை. எனத் தெரிவித்த அவர்

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் நூறுவீதம் தமிழ் மக்கள் வாழும் எமது பிரதேசங்களில் சிங்கள அரச உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள், இதனால் எமது மக்களுக்கு சிங்களம் தெரியாது அதிகாரிக்ககுத் தமிழ் தெரியாது, இதனால் எமது மக்கள் இவ்வாறான நிலையிலும் பாதிக்கப் பட்டு வருகினறார்கள், என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: