22 Sept 2015

நலாட்சி அரசாங்கத்தில் கருத்துச் சுதந்திரம் பேணப்படுகின்றன - சிறிநேசன்

SHARE
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் கருத்துச் சுதந்திரம் பேணப்படுகின்றன, தவறிளைத்தவர்களுக்கான தண்டனை வழங்கும் விடையம் உள்ளடக்கபட்டுள்ளன, புலனாய்வார்களின் தொபு மாவட்ட நாடாளுமன் உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வொன்று ஞாயிற்றுக் கிழமை (20) கோட்டைக்கல்லாற்றில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தானர்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

அரசியலில் நெளிவுகள், சுழிவுகள், மற்றும் கோட்பாட்டு அரசியலும் உள்ளன இவற்றை வைத்துக்  கொண்டு அனாகரீகமான முறையில் அரசியல் செய்வது எனக்குப் பிடிக்காத ஒன்றாகும். செய்யாத விடையங்களை செய்ததாகவும், மற்றவர்களை அநாகரீகமான முறையில் திட்டித்தீர்ப்பது, எடுத்த எடுப்பில் அறிக்கைகள் விடுவது போன்றதெல்லாம் எனக்குப் பிடிக்காத விடையங்களாகும், 

நான் உழைப்பதற்காகவோ, பிளைப்பதற்காகவோ, சுரண்டுவதற்காகவோ, என்னுடைய பையை நிரப்பிக் கொள்வதற்காகவோ அரசியலில் ஈடுபடவில்லை 30 வருட எனது கல்வி வாழ்வில் இயன்றவரை கழங்கமில்லாமல் எனது பணியினை நான் எனது மனச்சாட்சிக்கு ஏற்ற வகையில் செவ்வனே செய்துள்ளேன். அந்த திருப்பியோடுதான் நான் அரசிலுக்குள் இறங்கினேன். 

இதனைவிடுத்து படபடப்பு அரசியல், சிலுசிலுப்பு அரசியல், சிந்திக்காமல் அறிக்கைகளை விடுகின்ற அரசியல், என்றெல்லாம் பல விடையங்கள் உள்ளன. ஊடகங்களில் வரும் அறிக்கைகளைப் பாரத்துவிட்டு நானும் ஒரு அறிக்கை அரசியல்வாதியாக மாறவிரும்பவில்லை. நான் எடுபிடியாகவோ, கெடுபிடியாகவோ இருக்க விரும்பவில்லை.

எந்த அரசியற் கட்சியை எடுததுக் கொண்டாலும் வாதப் பிரதிவாதங்களும். விமர்சனங்களும், இருப்பது இயல்பானதாகும், ஒரு கட்சியை ஆரோக்கியமாக்குவதற்கு விமர்சனங்கள் தேவை. ஆனால் அந்த விமர்சனங்னகளை கட்சிமட்டத்திலே தெரிவித்து தீர்வு காண்பதானது அரோக்கியமானதாக அமையும். 

கடந்த கால போராட்ட விடுதலை மூலமாக தமிழ் சமூகம் ஒரு புத்தெழுச்சியைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வந்துள்ளது. ஆனால் துரதிஸ்ட்டவசமாக போர் மௌனிக்கச் செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழ் சமூகம் கல்வி, புவியியல், சனத்தொகை வளர்ச்சி, போன்றவ்றில்  மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். இந்த நிலையிலிருந்து மீழ்வதாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால்தான் அதனை செய்ய முடியும். 
  
எமது சமூகத்தை வனளர்த்தெடுக்க வேண்டுமாக இருந்தால் கல்வி என்கின்ற கருவியினை காதிரமான முறையில் நாங்கள் வழங்க வேண்டும். பாடசாலைகள் கல்வியில் மறுமலர்சியை ஏற்படுத்தக்கூடிய நிலையில் சேவைகளை இரட்டிப்பாக்க வேண்டும். 

அமிர்தலிங்கம், நீலம் திருச்செல்வம், சம்மந்தன், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், போன்றவர்வள் கடந்த காலங்களில் பெரும் மூளைசாலைகளாகவும், பெரும் சட்டத்தரணிகளாகவும், திறைமைபடைத்தவர்களானவும் செயற்பட்டதன் காரணமாக போரினவாத சக்திகள் எம்மவர்களின் மூளை வங்கிகளுக்கு ஈடு கொடுக்க முடியதவர்களாகக் காணப்பட்டார்கள், இதன் பின்னர்தான் இனப்பிரச்சனைகள் தேற்றுவிக்கப்பட்டன. மேலும் எமது இளைஞர்கள் கல்வி, மற்றும்,  உணர்வுகள் மூலமாகவும் பதப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த கால உள்நாட்டுப் பெறிமுறை தமிழ் மக்களுகு நம்பிக்கயைளிக்கவில்லை என சம்மந்தன் தெரிவித்துள்ளது போன்று தமிழ் மக்கள் உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றார்கள். 

உள்நாட்டு, வெளிநாட்டு, நீதிபதிகளையும், நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களையும் கொண்டு அமைக்கப் படுகின்ற ஒரு விசாரணை அமைப்பின் மூலமாக தமிழ் மக்கள் ஓரளவிற்கு எதையும் பெற்றுக்கொள்ளலாம என்கின்ற விடையம் இருக்கின்றது. 

இவற்றை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரம் தேவையாகவுள்ளது. இந்நிலையில் எமது தேர்ச்சியான தலைவர்களுக்கு இவ்விடையம் சார்பில் புரிந்துணர்வான அறிவுகள் உள்ளன.  

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் கருத்துச் சுதந்திரம் பேணப்படுகின்றன, தவறிளைத்தவர்களுக்கான தண்டனை வழங்கும் விடையம் உள்ளடக்கப் பட்டுள்ளன, புலனாய்வாள்ர்களின் தொல்லைகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

சீனாவின் ஆதிக்கத்திற்குள்ளாகியிருந்த கடந்த அரசின் செயற்பாட்டை தற்போதைய அரசு அதனைத் தளர்தியிருக்கின்றது. ஆனால் சர்வதேச விசாரணை என்கின்ற நிலைப்பாட்டில், அமெரிக்கா ஒரு மென்போக்கைக் கடைப்பிடிக்கின்றது. இருந்தாலும், எனவே நாம் எதிர் பார்க்கும் பொறிமுறைகள் நூற்றுக்கு நூறு வீதம் கிடைக்கா விட்டாலும் ஓரளவு 75 வீதமான அளவிற்கு எமக்குரிய தீர்வை அமெரிக்கா போன்ற நாடுகனால் கிடைப்பெறும் என எதிர் பார்கிகன்றோம். இதனையும் வெல்வதற்குரிய இராஜதந்திரம் எமக்குத் தேவை என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: