22 Sept 2015

புதுக்குடியிருப்பு படுகொலையின் 25வது ஆண்டு நினைவுஉணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

SHARE
(கங்கா)        

புதுக்குடியிருப்பு படுகொலையின் 25வது ஆண்டு நினைவுஉணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப் பற்று புதுக்குடியிருப்பில் அப்பாவித் தமிழ் மக்கள் 17 பேர் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் படுகொலைசெய்யப்பட்ட 25வது ஆண்டு நினைவுதினம் திங்கட் கிழமை (21) இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டுகாலை புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் விசேடபூசை வழிபாடும் புதுக்குடியிருப்பு சக்தி பாலர் பாடசாலையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும், புதுக்குடியிருப்பு கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

புதுவை அமைப்பின் தலைவர் திருமா.சதாசிவம் தலமையில் நடைபெற்ற இந்த அஞ்சலிநிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா பா.அரியநேத்திரன் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் சட்டத்தரணி கி.துரைராசசிங்கம் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உறுப்பினர்களான மா.நடராசா ஞா.கிருஸ்ணபிள்ளை, இராஜேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டுஉயிர் நீத்த உறவுகளுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு இராணுவசீருடை அணிந்த முஸ்லிம் ஊர்காவற்படையினர் புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் புகுந்து தங்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களை எழுப்பிதாங்கள் இராணுவத்தினர் என்றும் ஊரைசுற்றி வளைத்துள்ளதாகவும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறிபெண்கள் ஆண்கள் முதியவர்கள் உட்பட 45 பேரை கடற்கரை ஓரத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் வெட்டி படுகொலை செய்து கொண்டிருக்கும் வேளை இளைஞர் ஒருவர் அவர்களின் பிடியில் இருந்து தப்பியோட அவசர அவசரமாக துப்பாக்கிபிரயோகம் செய்து விட்டு ஊர்காவற்படையினர் தப்பியோடிவிட்டனர். இதன்போது இவர்களினால் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: