20 Sept 2015

25 வருட காலமாக கிழக்கு மாகாணத்திலே எந்த வித முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை – கிழக்கு முதலமைச்சர்

SHARE
கடந்த 25 வருட காலத்திற்குள் கிழக்கு மாகாணத்திலே எந்த வித முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை, பிறிமா, டோக்கியோ சீமெந் ஆகிய முதலீடுகளைத்தவிர திருகோணமலையிலிருந்து பொத்துவில் வரையில், எந்தவிதமான பாரிய முதலீடுகள் இல்லாமல் கிழக்கு மாகாணம் திட்மிட்டு புறக்கணிக்கப் பட்டுள்ள வரலாற்றை ஜனாதிபதி மாற்ற வேண்டும், என்பதை நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.
இவ்விடையம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும், முதலீட்டுக்குப் பொறுப்பான மலிக்சமரவிக்கிரம, ஆகியோருடன், அவர்கள், இந்தியாவுக்குச் செல்ல முன்னர் கிழக்கில் முதலீடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும், இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தின் முதலீடுகள் தொடர்பிலும் உள்வாங்கப்பட வேண்டும் எனவும், தெழிவாகப் பேசியிருக்கின்றோம்.

என கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார், மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நோயாளர் விடுதி திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(19) மாலை நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு நோயாளர் விடுதி திறந்து வைத்து விட்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுவாக ஆளணிப்பற்றாக்குறை நிலவி வருகின்றது. இவ்வாறான பற்றாக்குறைகளைத் தீர்த்து வைக்கின்ற பொறுப்பு அரசியல்வாதிகளாகிய எங்களுக்கு உள்ளது. எனவே கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளை மிகக் குறுகிய  காலத்திற்குள் நாங்கள் தீர்த்து வைப்போம். 

வைத்தியத்துறை என்பது ஒரு கிராமத்தினுடைய இதயமாக இயங்க வேண்டியதாகும். இதனை யாரும் மறுக்க முடியாது. ஜனாதிபதி கடந்த காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்தவர் என்ற காரணத்தினாலும், கிழக்கில் சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பாற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய ஜனாதிபதியுடன் பேசி இவற்றுக்குத் தீர்வு காண்போம். 

செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாவைக்கு மிகவும் அவசியமாகவுள்ள பிரேத அறையை எமது கிழக்கு மாகாணசபையினூக கட்டித்தரப்படும், என்பதோடு இவ்வைத்தியசாலையில் காணப்படும் அனைத்து குறைபாடுகளையும், நான் நிட்சயமாக நிவர்த்தி செய்து தருவேன். 

பாதிக்கப்பட்ட மக்கள் என் நாம் எல்லோரும் வெறும் பேச்சளவில் கூறிவிடாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய பொறுப்பு, அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக ஜனாதிபதி, மற்றும், பிரதமருக்கும், உள்ளது. 

இந்த நாட்டிலே ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வந்த பொறுப்பு வடகிழக்கிலே வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள்தான் என்பதை ஜனாதிபதி நன்றாக விளங்கியிருக்கின்றார். சிறுபான்மை மக்களின் அங்கீகாரத்தினால்தான் பிரதம மந்திரியும், அவரது பதவியில் அமரத்தப்பட்டுள்ளார். தற்போது சிறுபான்மை மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைகைய இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கூறிவருகின்றோம். 

கடந்தகால யுத்ததினாலும், கிழக்கு மாகாணம் கடந்த காலத்தில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வந்தாலும், தற்போது கிழக்கு மாகாணத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் புரையோடிக் கிடக்கின்றது. என்பதை நாங்கள் அரசாங்கத்திற்குத் தெரிவித்து வருகின்றோம்.

எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளதோடு குறிப்பாக அரசியல் தலைவர்களுக்கு உள்ளது.  எனவே கிழக்கு மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு கிழக்கிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும், குறிப்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும், ஒன்றிணைந்து செயற்படுவோம். என அவர் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: