கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை வளாக நலன்புரி முகாமிலிருந்து 1990 ஆம் ஆண்டு காணாமல் போன 158 தமிழ் மக்களினது 25 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை காலை பல்கலைகழகத்தின் முன்னால் இடம் பெற்றது.
தமது உறவுகளை இராணுவத்தினரே கடத்திச்சென்றதாக குற்றம் சுமத்தும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவர்களை கண்டு பிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு, நாங்கள் நினைவு கூறுவோம் எனும் தலைப்பில் எளிமையான முறையில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
ஆறுதலையும் சுகப்படுத்தலையும் எமக்களிப்பதற்காக உண்மையைத் தேடும் எமது பயணத்தில் அனைவரும் எம்முடன் இணையவேண்டும் என விரும்புகிறோம்.
சுகம் வேண்டுவதெல்லாம் புதைகுழி அல்ல, புன்னகை மனிதர்களையே என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இதேவேளை காணால் போனவர்களின் நினைவாக விளக்கேற்றும் நிகழ்வும் இடம் பெற்றது
0 Comments:
Post a Comment