அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் சுனாமி வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வீடுகள் பாவனையின்றி பாழடைந்ததுள்ளன. அத்துடன், பாவனையின்றியுள்ள வீடுகளைச் சுற்றி புல், பூண்டுகள்; வளர்ந்துள்ளதுடன், விஷஜந்துகளின் நடமாட்டமும் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பாவனையின்றியுள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் மற்றும் ஓடுகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுவதாகவும் இதனால், ஆலங்குளம் கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உறைவிடங்களின்றி வாழ்கின்ற குடும்பங்களுக்கு இந்த வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்Nனை பிரதேசத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு இந்த வீட்டுத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டிருந்தன.
இவ்வாறு வழங்கப்பட்டிருந்த 50 வீடுகளில் 23 வீடுகளில் மாத்திரமே குடியிருப்பாளர்கள் வசிப்பதாக ஆலங்குளம் கிராம திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.ஐ.மனாப் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில்; அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாவிடம் கேட்டபோது, இந்த வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் அக்கிராம மக்களும் கிராம அலுவலகரும் தன்னிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
வழங்கப்பட்ட வீடுகளில் நிரந்தரமாக வசிக்காதவர்களிடம் விளக்கம் கோரி கடிதம் மூலம் தகவல் பெற்று மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார். -
0 Comments:
Post a Comment