19 Aug 2015

உலக புகைப்பட தினம் இன்று

SHARE

உலக புகைப்பட தினம் இன்று (19) ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இன்றைய நாள் சர்வதேச புகைப்பட தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
புகைப்படம் என்பது தனித்தே ஒரு படமாக அன்றி ஒரு தனித்துவ கலையினை தன்னகத்தே வௌிப்படுத்துகின்றது. புகைப்படங்களும் அந்தக் கலையும் நமது வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த தொன்றாகும். வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வரும் கண்ணாடி தான் புகைப்படம். 
ஒரு சந்ததியினரை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்" (Daguerreotype) எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் (French Academy of Sciences) இம் முறைக்கு ஒப்புதல் அளித்தது.

ஆகஸ்ட் 19 ஆம் திகதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "(daguerreotype process) "ப்ரீ டூ தி வேர்ல்டு (“Free to the World.” ) என உலகம் முழுவதும் அறிவித்தது.  இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் எல்லாம் புகைப்படம் எடுப்பதென்பது மிகவும் அரிதான காரியமொன்றாகவிருந்தது. ஏனெனில் அந்தக் காலத்தில் ​தொழில்நுட்ப வசதிகளோ தேவையான சாதனங்களோ காணப்பட்டிருக்கவில்லை. ஆனால் இன்றைய காலங்களில்  சிறிய குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரினதும் கைகளில் நூற்றாண்டு வளர்ச்சியால் ஏற்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள். தற்காலங்களில் புகைப்படம் எடுப்பதற்கு புகைப்பட கருவியான கமரா தான் வேண்டுமென்றில்லை. கமரா பொருத்தப்பட்ட தொலைபேசியின் வருகையால் அனைவரினதும் கைகளில் புகைப்படம் எடுக்கக்கூடிய அரிய சாதனம்.

இதனால் அனைவரும் அனைத்து விதமான செயற்பாடுகளை புகைப்படம் பிடித்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்கின்றனர். இது நன்மையான வகையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் சில அறியாதவர்களின் செயற்பாடுகளால் தீமையும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து விதமான தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் நன்மையான விடயங்களிற்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதும் உண்மையே... அவ்வகையில் உலகத்திலுள்ள சகல புகைப்படக்காரர்களுக்கும் புகைப்பட விரும்பிகளுக்கும் சர்வதேச புகைப்பட தின வாழ்த்துக்கள்...
SHARE

Author: verified_user

0 Comments: