கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் பின்னால் வந்த காரும் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த இரு பெண்களே படுகாயமடைந்துள்ளார்கள். இவ்விபத்து தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment