21 Aug 2015

மின்னல் தாக்கி உயிரிழப்பு

SHARE

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள புணானைக் கிராமத்தில், வியாழக்கிழமை (20) மாலை  மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மயிலந்தனை புணாணையைச் சேர்ந்த முத்துக்கருப்பன் கணேசன் வயது (67) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

தனது வயலுக்கு சென்று காவல் கடமையில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவரது சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம்,நாளை வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: