மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைய நாட்களில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று அதிகாலை அல்லது நேற்றிரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமிலைதீவு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்று இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு பணம் மற்றும் உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவு மாவட்ட பொறுப்பதிகாரி கே. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கடையை மூடிவிட்டு வீடு சென்று மீண்டும் மறுநாள் காலை கடையை திறந்து பார்த்தபோது, கடை உடைக்கப்பட்டிருந்ததாக உரிமையாளர் தெரிவித்தார்
இம்மாத ஆரம்பத்தில் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரை பகுதிகளிலும் பல கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கொள்ளைச் சம்வபவங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments:
Post a Comment