24 Aug 2015

சொந்த வீடு வளவினைப் பார்து விட்டு வரச் சென்ற எனது மகன் மீண்டும் வீடு திரும்பவில்லை

SHARE

1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது பிரதேசத்தில் கடும் யுத்த சூழல் காணப்பட்டது, இதனால் நாங்கள் எமது சொந்த இடமான சின்னவத்தையிலிருந்து இடம்பெயர்ந்து ஆனையட்டியவெளி எனும் இடத்தில் குடியமர்ந்திருந்தோம். 

இந்நிலையில் 1992.04.05 அன்று சீனித்தம்பி மன்மதராசா எனும் 25 வயதுடைய எனது மகன் எமது சொந்த வீடு வளவினைப் பார்துவிட்டு வருவதற்காகச் சென்றவர் மீண்டும் எம்மிடம் திரும்பவில்லை எனவும், எனது மகனை கண்டுபிடித்துத் தருமாறும், மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள சின்னவத்தை எனும் கிராமத்தைச் சேர்ந்த தங்கராணி என்ற தாய் ஞாயிற்றுக் கிழமை (23) களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்….

நாம் இடம்பெயர்து இருந்த கிராமத்திலிருந்து எமது சொந்தக் கிராமமான சின்னவத்தைக்குச் சென்ற எனது மகனை காணவில்லை என தேடினோம், அப்போது அப்பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினர்தான் படையாகச் சூழ்ந்திருந்தர்கள், அவர்களிடமும் எனது மகன் பற்றி விசாரித்தோம்  நாங்கள் பிடிக்கவில்லை என தெரிவித்தார்கள். 

சின்னவத்தையிலிருந்த எமது சொந்த வீடும் அன்றயதினம் இராணுவத்தினரால் எரியூட்டப்பட்டது.  என்னுடைய மகனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, இன்றுவரை மகன் பற்றி எதுவித தகவலும் கிடைக்கவில்லை, தயவு செய்து எனது மகளைப்பற்றிய விடையங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள். எனத் தெரிவிதார்.  

SHARE

Author: verified_user

0 Comments: