22 Aug 2015

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு தேசிய பட்டியல் உறுப்புரிமை வழங்க மு.கா முன்வரவேண்டும்!

SHARE

நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் முயற்சியில் முன்னின்று செயற்பட்ட முஸ்லிம் அரசியல் வாதிகள் பலர் சொந்த மாவட்டங்களிளேயே மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளமை பற்றி நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னணியின் செயற்பாட்டாளரும் யெஸ்றோ நிறுவனத்தின் செயலாளாளருமான சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது :-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஹ், முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட், அப்துல் காதர் உள்ளீட்ட பலர் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போதும், பர்தா விடையம் பழிக்கப்பட்ட போதும்  பார்வையாளர்கள் போல செயற்பட்டதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டமையினாலுமே மக்கள் இவர்களை இனங்கண்டு தோற்கடித்துள்ளனர்.
நாட்டில் நல்லாட்சியை நிறுவுவதில் பாடுபட்ட முற்போக்கு சக்திகளுள் ஒன்றான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) திருகோணமலை,மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் இவ்விரு மாவட்டங்களிலும் நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னணியின் இரு வேட்பாளர்களும்  தோல்வியையே தழுவியுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட இணக்கப்பாட்டு அரசியல் புரிந்துணர்வு  அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னத்தில் போட்யிட்டது.இரு கட்சிகளின் இணக்கப்பாட்டின் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த இணைதலின் ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து ஆசனம் ஒன்று தெரிவாவது தடுக்கப்பட்டுள்ளதுடன் தேசிய ரீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியலிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.
நாட்டில் ஊழல் மோசடி ஒழிக்கப்பட்டு ஐக்கியமும் ஜனநாயகமும் அமையவிருக்கின்ற பாராளுமன்றத்தில் கட்டியெழுப்படவேண்டும். சமூகங்களுக்கிடையில் மட்டுமல்லாது சகோதர அரசியல் சக்திகளுக்கிடையிலும் சகோதரத்துவமும்,நல்லுறவும் பேணப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஐக்கியப்பட்டு மூன்று ஆசனங்களை  வெற்றி கொண்ட போதிலும் திருகோணமலை,மற்றும் வன்னி மாவட்டங்களில் தொடர்ச்சியாக இருந்து வந்த இரு பாராளுமன்ற பிரதிநித்துவங்களை இம்முறை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் ஆசனம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இணைவின் மூலமே காப்பாற்றப்பட்டுள்ளது என்பது வெள்ளிடை மலை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் செய்து கொண்ட இணக்கப்பாட்டு அரசியல் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வரும் காலங்களில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கான தேவைப்பாடுகள் உள்ளன.
இதற்கமைவாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியலில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்குவது தொடர்பில் சாதகமாக பரிசிலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வரவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
SHARE

Author: verified_user

0 Comments: