22 Aug 2015

காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு களுவாஞ்சிகுடியில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. (வீடியோ)

SHARE

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் சனிக்கிழமை (22) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இக்குழு களுவாஞ்சிகுடி, மற்றும் போரதிவுப்பற்று பிரதேசங்களிலிருந்து ஏற்கனவே விண்ணப்பித்த  710 விண்ணப்பதாரர்களிடம் விசாரணைகளை மேற்கொள்கிறது.
காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தவிசாளர் மெக்ஸல் பர்ணவித்தாரண தலைமையில், மனோகரி ராமநாதன், சுரங்க வைத்தியரெத்ன, டப்ளியு.ஏ.ரி.ரத்நாயக்க, எச்.சுமணரெத்தன ஆகிய ஆணையாளர்களைக் கொண்டு  நான்கு பிரிவுகளாக விசாரணைகள் நடைபெறுகின்றன.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைகள் ஞாயிற்றுக் கிழமைவரை நடை பெறும் எனவும்,  சனிக்கிழமை காணாமல் போனவர்கள் தொடர்பில் 150 புதிய விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுக்கதாகவும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோலரெத்தினம். தெரிவித்தார்.

















SHARE

Author: verified_user

0 Comments: