23 Aug 2015

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் நீண்டகாலமாக ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்.

SHARE

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் நீண்டகாலமாக ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது உறவுகள் பல தியாகங்களை செய்துள்ளனர்.

அந்தத் தியாகங்களை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நீண்டகாலமாக அதன் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றது என்று இம்முறை நாடாளுமன்றத்துக்கு  தெரிவான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பாற்சேனைக் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை த.தே.கூ. வின் சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்;போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'முன்பிருந்த அரசாங்கங்களுக்கு சோரம் போகாமல் இருந்து கொண்டு மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் கூடிய நம்பிக்கை வைத்திருந்ததன் காரணமாக இம்முறையும் கடந்த காலங்களை விட, அதிகளவான வாக்குகளை அழித்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற ஆசனங்களை விட கூடுதலான ஆசனங்களைப பெற முடிந்துள்ளது' என்றார்.
  
'மக்களிடம் பல கேள்விகள் உள்ளதையும்  நான் அறிவேன். மேலும், இந்தப் பொதுத் தேர்தலில் அடியேனும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்' எனவும் அவர் கூறினார்.

SHARE

Author: verified_user

0 Comments: