திருகோணமலை கன்னியாப் பிரதேசத்தில் மனைவியை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கணவனை நேற்று வெள்ளிக்கிழமை(28) இரவு கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகறாறு காரணமாக, மனைவியை கத்தியால் கையை வெட்டி காயம் ஏற்டுத்தியதோடு தாக்கியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயங்களுக்குள்ளான மளைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கணவனை கைது செய்து தடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்
0 Comments:
Post a Comment