ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர், சோமசுந்தரம்-கணேசமூர்த்தியின் தேர்தர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று துறைநீலாவணைக் கிராமத்தில் நடைபெற்றது.
இதன்போது இளைஞர் யுவதிகள் உட்பட கிராம பொதுமக்கள் பலரும், கலந்து கொண்டிருந்தனர்.
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்று நான் நாடாளுமன்றத்திற்குத், தெரிவாகவுள்ளேன். இதற்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள்.
அமையவிருக்கின்ற புதிய அமைச்சரவையில் நானும் ஓர் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்நெடுக்கவுள்ளேன்.
இன்னும் எத்தனையோ பற்பல தேவைகள் எமது மாவட்டத்தில் இன்றும் பூர்தி செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்நெடுக்கப் படவில்லை. இந்தக் குறையை எதிர் வருகின்ற 5 வருடங்களுக்குள் நான் பூர்தி செய்யவுள்ளேன் என இதன்போது வேட்பாளர் சோமசுந்தரம்-கணேசமூர்த்தி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment