மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரகல்லிமடுவில் திங்கட்கிழமை கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கிரான் - கோரகல்லிமடுவைச் சேர்ந்த எஸ்.சீவரெத்தினம் என்பவர் தமது வெற்றுக் காணியினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை மர்மப் பொருள் ஒன்று நிலத்தில் புதைந்து கிடந்ததைக் கண்ணுற்றுள்ளார்.
பின் உடனடியாக ஏறாவூர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மர்மப் பொருளினை நிலத்தில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மீட்கப்பட்ட பொருள் கைக்குண்டு என அடையாளம் காணப்பட்டது.
0 Comments:
Post a Comment