எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதியிலிருந்து சிரேஸ்ர ஊடகவியலாளர் சாமித்தம்பி ரவீந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக அறியமுடிகின்றது.
பாராளுமன்றத் தேர்தல் இடம் பெற்று முடிந்த கையுடன் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவதற்கான முஸ்தீபுகளை தற்பொழுதிருந்தே பலர் முன்னெடுத்து வரும் நிலையில் மேற்படி ஊடவியலாளரின் பெயரும் தமிழ் தேசியக் கூட்டைப்பின் தலைமைகளின் சிபார்சினை பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டடாரங்கள் ஊடாக அறியமுடிகின்றது.
சிரேஸ்ர ஊடகவியலாளரான சாமித்தம்பி ரவீந்திரன் கணிதத்துறையில் பொறியில் துறைசார் பட்டதாரியான இவர்இ தற்போது தொழிற்பயிற்சி கல்லூரியில் விரிவுரையளராகவும் கடமையாற்றி வருகின்றார். மூன்று மொழிகளையும் சரளமாக போசும் தகுதி கொண்டவர். பல மேடைகளில் பல அரசியல் வாதிகளின் சிங்களம்இ ஆக்கிலப் பேச்சுகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்த பெருமை இவருக்கு உண்டு என்பதும் குறிகப்பிடத்தக்கது.
ஊடகத்தறையில் பல தரப்பட்ட பாமரமக்களின் அன்றாட பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
இது தொடர்பாக ஊடகவியலாளர் ரவீந்திரனிடம் கேட்டபோது நான் எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவது இதனை மறுப்பதற்கில்லை போட்யிடுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment