11 Aug 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவிக்காக பல்லு இழிக்கிற கட்சி அல்ல- பசீர் சேகுதாவுத்

SHARE

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம்பேசும் சக்த்தி  இந்தத் தேர்தலில் கிடைக்கப்போகிறது… இந்தப் பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்…என முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஸ் தவிசாளருமான பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்…

மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அது மகிந்த ராஜபக்ஸ தலமையிலான அரசாங்கமாக இருந்தால் கூட்டமைப்புடன் பேசமாட்டாது…. ஆனால் ஐக்கியதேசிய முன்னணி ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு வழங்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாங்கள் அமைச்சராக வரப்போகிறோம் என்று சொல்லுகிற கட்சி அல்ல…. பதவிக்காக பல்லு இழிக்கிற கட்சி அல்ல…. 60 ஆண்டுகாலத்திற்கும் அதிகமாக தமிழத் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றே இலக்கு என்று செயற்படுகிற கட்சி…. எந்த ஒரு தருணத்திலும் அமைச்சுப் பதவிகளை பெறவேண்டும் என்ற இலக்கோடு செயற்பட்ட கட்சி அல்ல….  இனிமேலும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு, சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கப் போகிறோம் என்று எந்தக் காலத்திலும் சொல்லப் போவதில்லை.

தங்களுடைய இனத்தின் விடுதலை, இனத்திற்கு, இனப்பிரச்சனைக்கு தீர்வைத் தருகிற உடன்பாட்டோடு தான் அவர்கள் தமது ஆதரவை வழங்குவார்கள்.

அது தமிழீழம் அல்ல.. ஆனால் நியாயமான, தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய, வெளி உலகத்தில் வாழுகிற, சிறுபான்மைத் தமிழ் மக்கள், சர்வதேச ரீதியாக வாழுகிறவர்கள், ஏற்றுக் கொள்கிற, அவர்களும் வந்து இந்த இலங்கையிலே சிறுபான்மை மக்களின் பங்காளர்களாக, இலங்கையிலே பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழுகிற, சரியான அடிப்படையில் தான், அவர்கள் உடன்படுவார்கள்…. எனத் தெரிவித்துள்ளார்..


SHARE

Author: verified_user

0 Comments: