10 Aug 2015

தலைமைத்துவ பயிற்சி முகாம்

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் மத்தியில் தலைமைத்துவத்தை வளர்க்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி முகாம், மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து சுமார் 100 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இளைஞர்களை வலுப்படுத்தி சமூக நலன் சார்ந்த விடயங்களில் அவர்களின் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.என்.எம்.நைரூஸ் தலைமையில் நடைபெற்ற இதற்கான ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமையக அபிவிருத்தி பிரிவுக்கான பிரதி பணிப்பாளர் சுனில் கருணாரட்ன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: