24 Aug 2015

தொழிலுக்காக கருங்கல் குவாறிக்குச் சென்ற எனது மகன் மீண்டும் வீடு திரும்பவில்லை- தாய் சாட்சியம்

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியைச் சேர்ந்த 34 வயதுடைய எனது மகன் மாணிக்கப்போடி ரஞ்சுதன் என்பவர் எமது கிராமத்திற்கு அருகிலுள்ள தும்பாலை எனுமிடத்தில் கருங்கல் குவாறியில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார் 

கடந்த 2008.09.04 அன்று வழக்கம்போல் எமது வீட்டிலிருந்து புறப்பட்டு  தொழிலுக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.  என காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் காணாமல் போன ரஞ்சுதனின் தாய்  கண்மணி ஞாயிற்றுக் கிழமை களுவாஞ்சிகுடியில் சாட்சியமளித்துள்ளார்.
அவர் மேலும் இதன்போது குறிப்பிடுகையில்….

எனது மகன் கருங்கல் உடைத்து எமது குடும்பத்தை வழிநடாத்தி வந்தார் தற்போது அவரில்லாமல் வருமானத்திற்கும் வழியில்லபமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எனது மகன் தொழில் சொய்யும் இடத்திற்கு அருகில் விசேட அதிரடிப்படையினரும், கருணாகுழுவினரும்மான் இருந்தார்கள் எனது மகனை அவர்களர்தான் பிடித்துக் கொண்டு போயிருப்பார்கள். 

எனவே எனது மகனை எங்கிருந்தலும் கண்டுபிடித்துத்தாருங்கள்.  என அவர் காணாமல் போனவர்களை விசாரணை செய்யும்  ஆணைக்குழுவிடம் கோரிக்ககை விடுத்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: