23 Aug 2015

இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட எனது கணவரை மீட்டுத்தாருங்கள் கண்ணீர் மல்க மனைவி ஆணைக்குழுவிடம் கோரிக்கை.

SHARE

லெட்சுமி ஆகிய நான் மட்டக்களப்பு மாவட்டம் போரதிவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் கணேசபுரம் எனும் கிராமத்தில் வசித்து வருகின்றேன் எனது கணவர் இராமலிங்கம் சுவேந்திரன் என்பவர் கடந்த 2009.03.20 அன்று காணாமல் போனார்.

காணாமல் போகும்போது அவருக்கு 27 வயது. எமது வீட்டில் வைத்து செங்கல் உற்பத்தித் தொழில் செய்து எனது குடும்பத்தைப் பார்து வந்தார். எமக்கு தற்போது 9 வயதுடைய பிள்ளை ஒன்று உள்ளது. எனது கணவர் காணாமல் போன நாள்முதல் பொலிசார், இராணுவத்தினர், மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்றோரிடம் முறையிட்டேன். 
இன்றுவரை எனது கணவர் வீடு வந்து சேரவில்லை. எனது கணவர் உயிருடன் இருக்கின்றார் என்றுதான் நான’ இன்று வரை நம்பிக் கொண்டிருக்கின்றேன் எனது கணவரை எங்கிருந்தாலும் தேடிக் கண்டு பிடித்துத் தரவும். என லெட்சுமி என்ற பெண் சனிக்கிமை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் வைத்து காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஆணைக்குமுவின் முன் சாட்சியமளித்தார்.

இதன்போது அவர் மேலும் ஆணைக்குழுவிடம்,  தெரிவிக்கையில்….
கடந்த 2009.03.20 அன்று எமது வீட்டிலிருந்து புறப்படு மாமியின் வீட்டுக்குச் சென்று திரும்பும் வழியில் வைத்து எனது காணவர் காணமாமல் போயுள்ளார். அன்றயதினம் எமது கிராமத்தில் பொலிசாரும், இரணுவத்தினரும் சுற்றி வளைத்திருந்தனர். எனது கணவரை இராணுவத்தினர்தான் பிடித்துள்ளார்கள். எமது வீட்டுக்கு அரைக் கிலோமீற்றர் தொலைவில் இராணுவ முகாமும், 2 கிலோ மீற்றர் தொலைவில், பொலிஸ் நிலையமும் அமைந்திருந்தது. அவர்களிடம் நான் சென்று விசாரித்தபோது எனது கணவரை அவர்கள் பிடிக்கவில்லை என தெரிவித்தார்.

தற்போது நான் மிகவும் கஸ்ற்றத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன், சமூர்த்தியினால் மாதாந்தம்  1500 ரூபாய் மாத்திரம் கிடைக்கின்றது, எனது பிள்ளையையும் படிப்பிக்க வேண்டும்,  எனக்கு எனது கணவர் இறந்து விட்டார் என்ற மரண சான்றிதழோ, நிவாரணங்களோ, தேவையில்லை எனக்கு எனது கணவர்தான் வேண்டும் எங்கிருந்தலும் கண்டுபிடித்து தரவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: