கிழக்கு பல்கலைகழகத்தில் தேசிய விவசாய ஆராய்ச்சி மாநாடு கடந்த புதன்கிழமை கிழக்கு பல்கலைகழக விவசாய பீடாதிபதி பி.சிவராசா தலைமையில் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
'உணவு தன்னிறைவுக்கான சவால்களும் வாய்ப்புக்களும்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஆராய்ச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் அழைக்கப்பட்டு மங்கள விளங்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாநாடு தொடர்பான அறிமுக உரையை கலாநிதி எஸ்.சுதர்சன் நிகழ்த்தினார்.
இந் நிகழ்வுக்கு விசேட அதிதியாக கிழக்கு பல்கலைகழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் உமா குமாரசுவாமி, கௌரவ அதிதி பேராதெனிய பல்கலைகழக பேராசிரியர் எ.என்.எப்.பெரேரா, பேராதெனிய பல்கலைகழக விவசாய துறை ஆராய்ச்சி மேலதிக பொது பணிப்பாளர் கலாநிதி டப்ளியூ.எம்.ஏ.டி.பி. விக்கிரமசிங்க மற்றும் கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
'உணவு தன்னிறைவுக்கான சவால்களும் வாய்ப்புக்களும்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற தேசிய விவசாய ஆராய்ச்சி மாநாட்டின் அரங்கு நிகழ்வின் விசேட உரையை பேராதெனிய பல்கலைகழக பேராசிரியர் எ.என்.எப்.பெரேராவும், பேராதனிய பல்கலைகழக விவசாய துறை ஆராய்ச்சி மேலதிக பொது பணிப்பாளர் கலாநிதி டப்ளியூ.எம்.ஏ.டி.பி. விக்கிரமசிங்கவும் நிகழ்த்தினர்.
நடைபெற்ற நிகழ்வில் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வருகைதந்த அதிதிகளுக்கு மாநாட்டு புத்தகம் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment