மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரசேத்தில் அமைந்துள்ள மாலையர் கட்டு எனும், கிராமத்தில் செவ்வாய் கிழமை (25) அதிகாலை புகுந்த காட்டுயானைக் கூட்டத்தினால் அக்கிராம மக்கள் அல்லோல கல்லோலப் பட்டுள்ளன.
இது விடையமாக மேலும் தெரிய வருவதாவது……
செவ்வாய் கிழமை அதிகாலை 3 மணியளவில் 18 காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் ஒன்று இக்கிராமத்தில் புகுந்து வாழை, தொன்னை, மற்றும், நிலக்கடலைத் தோடங்களையும் அழித்துள்ளதோடு யானை ஒன்று கிராம வாசிவருவரையும் தாக்க முற்படுகையில் அவர் வீழ்ந்ததில் அவரது கையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகவும், அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாலையர் கட்டுக் கிராமத்திற்கு அருகிலுள்ள சிறிய காட்டுப் பகுதியில் காட்டு யானைகள் தற்போது பகல் வேளையில்லும் உலாவும் காட்சியும் எனது கமராவில் செல்வாய் கிழை பதிவாகியது.
இப்பிரதேசத்தில் மிக நீட்ட காலமாக 18 காட்டு, யானைகளைக் கொண்ட கூட்டம் ஒன்று தங்கியிருப்பதாகவும் இரவில் கிராமத்திற்குள் உட்புகுந்து அட்டகாசங்களை நடாத்திவிட்டு மீண்டும் அதிகாலை வேலையில் அப்பகுதியிலுள்ள சிறிய காட்டுப் பகுதியில் நகர்வதாகவும், இச்சம்பவம் எமது; தொடர் கதையாக இருந்துவருவதாகவும், அப்பகுதிவாழ் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேச மக்களன் காட்டு யானைகளினால் தொடர்ந்து அவஸ்த்தைப்படுவது குறித்து வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுப்பதிகாரி வ.சுரேஸிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது…
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் எமது கிளைக் காரியாலயம் ஒன்று அமைந்திருந்தது. அவற்றை தற்போது ஒருசில பிரச்சனைகள் காரணமாக தற்காலிகமாக நீக்கியுள்ளோம். போரதீவுப்பற்று பிரதேச செயலாளருடன் கதைத்துவிட்டு பிரச்சைனைகளை சுமுகமாக கையாண்டு மீண்டும் அப்பகுதியில் எமது திணைக்களத்தின் கிளைக் காரியாலயம் ஒன்றை நிறுவி அதனூடாக அங்குள்ள காட்டு யானைகனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment