அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பள்ளக்காடு களியோடை ஆற்றில் நேற்று சனிக்கிழமை மாலை சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆலையடிவேம்பு,அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த மூவரும் உழவு இயந்திரத்தின் இழுவைப்பெட்டியில் ஆற்று மண் ஏற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment