8 Aug 2015

எமது மக்கள் பட்ட வேதனைகளுக்கு தீர்வுகிடைக்க வேண்டும் - சம்மபந்தன்

SHARE

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய  கூட்டமைப்பு 4 ஆசனங்களைப் பெறவேண்டும் இதற்கு மாவட்டத்தில் தமிழ் தேசிய  கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிருக்கின்ற 8 வேட்பாளர்களும் ஒன்றுமையுடன்  செயற்பட்டு மக்களைத் தெழிவூட்ட வேண்டும்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மபந்தன் தெரிவித்துள்ளார். 


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நிகழ்வொன்று சனிக்கிழமை (08) மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் நன்கு அறிவோம். அவர் ஒரு ஜனநாயகவாதி. சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பலதடவை ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றோம். சம்பூர் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஐ.நா. அறிக்கை இவ்வருடம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது. அதனடிப்படையில் நாட்டில் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஊடாக எமது பிரச்சினைக்கு எமது தேசியப் பயணத்திற்கான தீர்வு வெளிவரும்..

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். அதில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை  எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாமற்றது என்று கூறமுடியாது. இது ஏனைய நாடுகளிலும்  உள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது.  அதில் எதுவித வித்தியாசங்களும் இல்லை இதனை எவரும் குறை கூறமுடியாது. இந்த தேர்தல்; விஞ்ஞாபனத்தை வருகின்ற தேர்தல் மூலம் எமது மக்கள் நிருபிக்க வேண்டும் இதனை எமது மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும், செயற்படுவார்கள் என்று நான் நம்புகின்றோம்.

எமது மக்கள் வன்முறைகளை விரும்பவில்லை எமது மக்கள் பட்ட வேதனைகளுக்கு தீர்வுகிடைக்க வேண்டும். இதுதான் எமது நிலைப்பாடும் சர்வதேசத்தின் நிலைப்பாடும் இதுதான். விசுவாசமான நல்லிணக்கம் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். இதற்கு இந்த நாட்டின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வுகிடைக்கப்பெற வேண்டும் இதற்கு அமைய இருக்கின்ற புதிய நாடாளுமன்றத்தினூடாக இதனை  பெற்றுக் கொள்ள வேண்டும். எமது அபிப்பிராயத்தினை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக அறிவித்துள்ளோம். எமது இவ் விஞ்ஞாபனத்தை அரசு ஏற்றுக் கொள்ள வேணடும். எமது அரசியல் கலைகலாசார, பொருளாதார, அபிலாசைகள் அனைத்து நிறைவேற்றப்பட வேண்டும். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: