10 Aug 2015

வீட்டுக்கொரு பட்டதாரி உருவாக்கப் பட்டால் சமூகம் தானாகவே அபிவிருத்தியடையும் - அமல்

SHARE

வீட்டுக்கொரு பட்டதாரி உருவாக்குவாக்கப் பட்டால் சமூகம் தானாகவே அபிவிருத்தியடைந்துவிடும், என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும், எஸ்.எஸ்.அமல் தெரிவித்துள்ளார்.

வந்தாறுமூலைக் கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை (09)  நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது  அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 
கடந்த கால யுத்தம் காரணமாக எமது தமிழ் இளைஞர், யுவதிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். யுத்தத்தின் விளைவால் அப்போதைய தமிழ் இளைஞர், யுவதிகள் அடிப்படைக் கல்வியை இழந்தனர். அதனால் அவர்களால் உயர்கல்வியையும், மேற்கொள்ள முடியாமல் போனது. அவ்வாறான சூழலில்  பலரின் தொழில் வாய்ப்புக்கள் கேள்விக்குறியானது.

ஆனால் இன்றைய சூழலில் அவ்வாறு அல்லாமல் கல்வியை அடிப்படையில் இருந்து பட்டப்படிப்பு வரை மேற்கொள்ள கூடிய சூழல், காணப்படுகின்றது.

எனவே தற்போது தமிழ் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி தொடக்கம் பட்டப்படிப்பு வரை வழிகாட்டல்களையும், கற்றலுக்கு தேவையான உதவிகளையும் மேற்கொண்டு, வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்குவதன் மூலம் தனிமனித வாழ்க்கையும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தையும் அபிவிருத்திப் பாதையிலிட்டுச் செல்லலாம். இந்நடவடிக்கைக்குரிய திட்டம் எம்மிடம் உள்ளது என அவர் தெரிவித்தார்.  



SHARE

Author: verified_user

0 Comments: