எனது இரண்டு மகன்களும் ஒரே நேரத்தில் கடத்தப்பட்டனர். அவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா? அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என்று காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், வி.புவனேஸ்வர் என்ற தாய் மன்றாடினார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயகலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வின் போது தொடர்ந்து சாட்சியமளித்த அந்த தாய், மேலும் கூறியதாவது,
இந்நிலையில், 6.8.1990ஆம் ஆண்டு எனது வீட்டுக்கு இராணவத்தினர் வந்து எனது இரண்டு மகன்களான பி.நந்தரூபன் (வயது 21) ,பி.நந்தமோகன் (வயது 18) இருவரையும் அழைத்துச் சென்றனர்.
எனது பிள்ளைகளை கொண்டுபோக வேண்டாம் என மன்றாடினேன். ஆனால், அவர்கள் விடவில்லை. இன்றுவரை எனது இரண்டு பிள்ளைகளும் விடுவிக்கப்படவில்லை.
தற்போது எனது பிள்ளைகள் எங்கிருக்கின்றார்கள்? உயிருடன் உள்ளார்களா என்பது கூட எனக்குத் தெரியாது.
நான் பலரிடமும் சென்று கேட்டேன். ஆனால், எனது இரண்டு பிள்ளைகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இந்த ஆணைக்குழுவாவது எனது பிள்ளைகள் இருவரையும் மீட்டுத்தருமா என்ற ஏக்கத்துடன் இங்கு வந்துள்ளேன்' என அந்த தாய் மன்றாடினார்.
0 Comments:
Post a Comment