4 Aug 2015

நான் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கோ, அபிலாசைகளுக்கோ, அரசியல் பயணத்திற்கோ, எதிரானவன் அல்ல – கணேசமூர்த்தி

SHARE

நான் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கோ, அபிலாசைகளுக்கோ, அரசியல் பயணத்திற்கோ எதிரானவன் அல்ல. 13 வது திருத்தச் சட்டத்தின் மூலம் பெற்றுக் கொண்ட மாகாணசபை மிகவும் பலவீனமான அரசியல் நிருவாகக், கட்டமைப்பாகக் காணப்படுகின்றது.  இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின், அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய எந்த வித அறிக்கைகளையும் முன்வைக்கவில்லை.  

என முன்னாள் பிரதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு – கோவில்போரதீவில் செவ்வாய் கிழமை (04) தேர்தல் பிச்சாரக் காரியலயம் ஒன்றைத் திறந்து வைத்து மக்கள் மத்தியல் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..

மட்டக்களப்பு மாட்டத்திலருந்து தமிழர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்ப்பில் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களும், விரும்புகின்றனர். கடந்த ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து அரசாங்கம், நாட்டுச் சட்ட திட்டங்களை மதிக்கவில்லை. ஆனால், ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் புதிய நல்லாட்சி மலந்துள்ளது.

சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை அப்போதிருந்த மஹிந்த ராஜ பக்சவின் அரசாங்கம் மதிக்கவில்லை. சிறுபான்மையின மக்களின் மத, கலை, கலாசார விடையங்களை ஆக்கிரமிப்புச் செய்தார்கள் இக்காரணங்களினால்தான் சிறுபான்மையின் மக்களால் மஹிந்த அரசு தோற்கடிக்கப்பட்டது. 

எதிர் வருகின்ற 17 ஆம் திகதிக்குப பின்னர் இந்த நாட்டிலே ஐக்கிய தேசியக் கட்சி தனிப் பெரும் கட்சியாக ஒரு பலம் பொருந்திய ஆட்சியை அமைக்கவிருக்கின்றது. அமையவிருக்கின்ற புதிய அரசில் மட்டக்களப்பிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்.

எமது மக்கள் சுமார் 68 வருட காலமாக தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்து, வாக்களித்து எதுவித பலனுமில்லை.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் இன்றும் தீர்க்கப்பட வில்லை இதனை நான் பூரணமாக ஏற்றுக் கொள்கின்றேன். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் யாவும் நியாயமான முறையில் தீர்க்கப்படுவதற்கு அரசியல் சாசனம் ஒன்று எழுதப்பட்டு நாடாளுமன்றத்தில் அந்த சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும்.

நான் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கோ, அபிலாசைகளுக்கோ, அரசியல் பயணத்திற்கோ எதிரானவன் அல்ல. 

13 வது திருத்தச் சட்டத்தின் மூலம் பெற்றுக் கொண்ட மாகாணசபை மிகவும் பலவீனமான அரசியல் நிருவாகக், கட்டமைப்பாகக் காணப்படுகின்றது.  இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய எந்த வித அறிக்கைகளையும் முன் வைக்கவில்லை.

13 வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத், தீர்வாக அமையாது என்பதை எமது மக்கள் நன்கு உணர வேண்டும். நாங்கள் அரசாங்க கட்சியில் சேர்துதான் அரசிடமிருந்து தீர்வுகளைப் பெறவேண்டும். புதிய அரசு பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரம தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் கடந்தும் இன்றும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப் படவில்லை. இதுவற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவனிக்காமலுள்ளது. 

எமது கட்சிய ஆட்சிக்கு வந்ததன், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து தமிழ் இளைஞர் யுவதிகளையும் விடுதலை செய்யப்படும். என பிரதமர் எமக்கு உறுதியளித்துள்ளார். எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.













SHARE

Author: verified_user

0 Comments: