26 Aug 2015

சிறுபோகத்தில் நோய்த் தாக்கம் ஏற்பட்ட போதிலும் அதிக விளைச்சல்

SHARE

சிறுபோக நெற்செய்கையில் நோய்த் தாக்கம் ஏற்பட்டடுள்ள போதிலும் அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எஸ். சிவலிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, மண்டூர், கொக்கட்டிச்சோலை, வாகரை, வாகனேரி உட்பட்ட பல பிரதேசங்களில் வருடாந்தம் சிறுபோகச் செய்கை 58 ஆயிரம் ஏக்கர் முதல் 62 ஆயிரம் ஏக்கர் வரை செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வருடம் சிறுபோகச் செய்கையில் வழமையாக ஏக்கருக்கு 50 ஆயிரம் புசல் முதல் 60 ஆயிரம் புசல் வரை விளைச்சல் கிடைக்கும் நிலையில் நோய்த்தாக்கம் ஏற்பட்ட போதிலும் விளைச்சல் 80 ஆயிரம் புசல்வரை கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அறுவடைச் செய்கையில், பெண்கள் பலர், குறித்த வயல்களில் விழுந்து கிடக்கும் நெற்கதிர்களைச் சேகரித்து வீதியில் காயவைத்து வேறாக்கி பெறப்படும் நெல்லை தமது உணவிற்காகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்.
அத்தோடு வயல்வெளிகளில் கிடைக்கும வைக்கோல் மற்றும் புற்களை சேகித்து வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீனியாகப் பயன் படுத்துவதாக மேலும் கூறினர்.
இவ்வருடத்திற்கான சிறுபோகச் செய்கை முடிவடைந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மழை வீழ்ச்சியை நம்பிச் செய்யும் பெரும் போகச் செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: