20 Aug 2015

மட்டக்களப்பில் படுதேல்வியைச் சந்தித்த கட்சிகள்.

SHARE

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதான கட்சிகள் நான்கு தவிர ஏனைய 12 கட்சிகளும், 30 சுயேட்சைக்குழுக்களும் சேர்ந்து 8500 வாக்குகளைப் பெற்றுள்ளன. சுயேட்சைக்குழுக்களுக்கு எல்லாமாகச்சேர்ந்து 3600 வாக்குகளைப் பெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகளும், 30 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட்டிருந்தன. அந்த வகையில் பிரதான கட்சிகளான நான்கு கட்சிகளை விடவும் உதிரிக்கட்சிகள் ஒரு வீதமான வாக்கினைக் கூடப் பெறவில்லை.
அந்த வகையில், தமிழர் விடுதலைக் கூட்டணி 959, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 865, ஈழவர் ஜனநாயகக் கட்சி 790, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக்கட்சி 424, அகில இலங்கை தமிழர் மகா சபை 401, எமது தேசிய முன்னணி 341, ஈ.பி.டி.பி 311, ஜே.வி.பி 81, ஐக்கிய மக்கள் கட்சி 46, முன்நிலை சோசலிசக் கட்சி 43, புதிய சிகல உறுமய 26, ஜன செத பெரமுன 18 வாக்குகளைப் பெற்றுள்ளன.
மட்டக்களப்பு, செங்கலடி, சித்தாண்டி, கல்லாறு, வாழைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 8 சுயேச்சைக்குழுக்கள், காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 சுசேட்சைக்குழுக்களுமாகச் சேர்ந்து மொத்தமாக 30 சுயேட்சைக் குழுக்களுமாகச் சேர்ந்து 3600 வரையான வாக்குகளைப் பெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் படி 365167 பெர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில், 252397 பேர் வாக்களித்திருந்தனர் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 13 551, 238 846 வாக்குகள் அங்கீகரிக்கப்பட்ட வாக்குகளாகும்
SHARE

Author: verified_user

0 Comments: