30 Aug 2015

களுதாவளைப் பிரதேச்சதில் மிளக்காய்ச் செய்கையில் வாடல் நோயின் தாக்கம் அதிகம் - விவசாயிகள் கவலை

SHARE

மட்டக்களப்பு மாட்டம் களுதாவளைப் பிரதேச்சதில் மேட்டு நிலத்தில் மிளக்காய் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தற்போது பொரும் இன்னல்களை எதிர் கொண்டு வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது மிளயாக் செய்கையில் வாடல் நோய் அதிக தாக்கத்தைச் செலுத்துவதனால் தாம் பெரும் நஸ்ட்டத்தை எதிர் கொண்டு வருகின்றோம். இந்த வாடல் நோக்கு எதவித கிருமி நாசினிகளும் பெருந்தாத நிலையில் காய்க்கும் நிலையிலே மிளகாய்ச் செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டட்ளதாகவும் அவர்கள், தெரிவிக்கின்றனர்.
வாடல் நோய் என்பது பங்ஸின் தாக்கம், வைரஸ், பக்ரீரியாவின், மற்றும் நேமிட்டோ என்கின்ற கிருமியின் தாக்கங்களினால் ஏற்படுகின்றது. இவற்றுள் பங்கஸின் தாக்கதினால், ஏற்படும் வாடல் நோயை பங்கஸை அழிக்கக் கூடிய கிருமிநானிசிகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

ஆனால் வைரஸ், பக்ரீரியா மற்றும், நேமிட்டோ என்கின்ற கிருமியின் தாக்கங்களினால் ஏற்படும், வாடல் நோய்களைக் கட்டுப்படுத்த கிருமிநாசினிகள் பொருந்தாது, இவற்றைக் குறைப்பதற்கு, அல்லது கட்டுப்படத்துவதற்கு, விவிசாயிகள் தொடர்ந்து ஒரே நிலப்பரப்பில் மிளகாய்ச் செய்கையை மாத்திரம் செய்கை பண்ணாமல் கத்தரி, பயற்றை, வெண்டி, வெங்காயம், போன்ற மாற்றுப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும், பட்சத்தில் நாளடைவில் வாடல் நோய் இல்லாமல் போய்விடும் என வேண்டும் என விவசாயப் போதனைசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

களுதாவளைப் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்குருக்கு மேற்பட்ட நிலங்களில் தற்போது விவசாயிகள் மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: