வெற்றிலையில் போட்டியிடும் பிள்ளையானுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் காத்தான்குடிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொடுக்கும், சிந்தித்து செயற்படுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
சித்தாண்டி பொதுச்சந்தை கட்டடத் தொகுதியில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி கட்ட பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் சேர்ந்து இன்னும் இருக்கின்றார்கள், பட்டிருப்பு தொகுதியில் முன்னாள் இராசமாணிக்கம் ஐயாவின் பெயரை விற்று பிழைக்கும் சாணக்கியன், மட்டக்களப்பில் நகரில் இருக்கின்ற ஜோன்பிள்ளை, அதேபோல் இன்னும் இருவர்கள் போட்டியிடுகின்றார்கள்.
நாங்கள் இவர்கள் போன்றோருக்கு அளிக்கும் வாக்கு அது ஹிஸ்புல்லாவை பாராளுமன்றத்துக்கு உயர்த்துவதாற்காக நாங்கள் விடுகின்ற தவறு.
ஆகவே எங்கள் தலையில் நாங்கள் மண்ணை அள்ளிப்போடப் போகின்றோமா?. என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும்.
0 Comments:
Post a Comment