22 Aug 2015

ஹென்றி மகேந்திரனின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்

SHARE
அம்பாறை மாவட்ட கல்முனை தேர்தல் தொகுதிக்குரிய வேட்பாளர் ஹென்றி மகேந்திரனுக்கு தேசியப் பட்டியல் மூலம் எம்.பி. பதவி வழங்கப்பட  வேண்டும் என்று வலியுறுத்தி,  கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக அவரின் ஆதரவாளர்களில் சிலர் சுழற்சி முறையிலான சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை(21) ஈடுபட்டனர்.

இது தொடர்பில் உண்ணாவிரதமிருந்த சிலர்  கருத்துத் தெரிவிக்கையில்; கல்முனைப் பிரதேச தமிழ் சமூகம் கடந்த மூன்று தசாப்த காலமாக அரசியல் ரீதியாக பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
கல்முனையிலிருந்து நாடாளுமன்றத்துக்கான தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் இத்தகைய சவால்கள் தொடர்ச்சியாக இருந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் கல்முனை மக்களின் உள்ளக் கிடக்கைகளை விளங்கிக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது தமிழ் அரசியல் தலைமைகளின் தலையாய கடமையாகும். அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கும் இரண்டு தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் ஒன்றினை கல்முனைப் பிரதேச மக்களுக்காக வழங்க வேண்டும் என்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: