11 Aug 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 2.30 மணிவரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

தமது அஞ்சல் வாக்குகளை ஏற்கனவே குறித்தொதுக்கப்பட்ட நாட்களில் அடையாளமிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத அஞ்சல் வாக்காளர்கள் நாளைய தினம் மாவட்டதேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும்.

கல்விப் பொதுத் தரதார பரீட்சைக் கடமைகள் பொறுப்பளிக்கப்பட்டதன் காரணமாக அடையாளமிட முடயாது போகும் ஆசிரியர்களும் அதிபர்கள் மற்றுமு; கல்வி அலுவலர்களுக்கு மாத்திரம் 14ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையில் அறு;சல் வாக்கு அடையாளமிடமுடியும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இதுவரையில் அஞ்சல் வாக்கு அடையாளமிடாத அஞ:சல் வாக்காளர்களுக்குமு; இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 9842 பேர் தகுதி பெற்றவர்களாக தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்புக்காக மட்டக்களப்பு, கல்குடா , பட்டிருப்பு ஆகிய தொகுதிகளில் 176 நிலையங்கள் வாக்களிப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தபால் மூல வாக்களிப்பிற்கு 3ஆம ;திகதியும், 5 மற்றுமு; 6ஆம்திகதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறிப்பிட்டளவான் அஞ்சல் வாக்குகள் இதுவரையில் அடையாளமிடப்படவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எமது தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனசெத பெரமுன ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

மட்டக்களப்பு மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும், கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும் , பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளன.

அதன்படி, மட்டக்களப்பில் 199 நிலையங்களும் , கல்குடாவில்115 நிலையங்களும்,    பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்கள்  நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: